திரைக்கு பின் போராட்டம்...அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட தென்னிந்திய நடிகர், நடிகைகள்..

Vishnu Vishal Anushka Shetty Kajal Aggarwal Samantha
By Jai Aug 10, 2026 09:00 AM GMT
Report

சினிமாத்துறையில் நடித்த நடிகைகள் தனிப்பட்ட விதத்தில் பல கஷ்டங்களை சந்திப்பதுண்டு. அப்படி நடிகைகள் சில அறியவகை நோயால் பாதிக்கப்பட்டு அவதியுறுவதும் உண்டு. அப்படி தென்னிந்திய சினிமாவில் 5 டாப் நடிகர், நடிகைகள் சந்தித்த அரியவகை நோய் பாதிப்புகள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்து கொண்டனர்.

 திரைக்கு பின் போராட்டம்...அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட தென்னிந்திய நடிகர், நடிகைகள்.. | South Celebrities Battles With Rare Illnesses

சமந்தா

அந்தவகையில் நடிகை சமந்தா, தனக்கு மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதை அறிவித்தார். இந்த நோய் உடலின் தசைப்பகுதிகளில் தீவிர வீக்கத்தையும் பலவீனத்தையும் ஏற்படுத்தக்கூடியதுதான்.

திரைக்கு பின் போராட்டம்...அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட தென்னிந்திய நடிகர், நடிகைகள்.. | South Celebrities Battles With Rare Illnesses

காஜல் அகர்வால், அனுஷ்கா

நடிகை காஜல் அகர்வால், தனக்கு ஒரு தற்காப்பு நோய் பாதிப்பு ஏற்பட்டது. 5 வயது முதலே மூச்சுக்குழாய் ஆஸ்துமா பாதிப்புடன் வாழ்ந்து வருவதாகவும், இதற்கான நீண்டகால உணவு, வாழ்க்கைமுறை கட்டுப்பாடுகளை பின்பற்றியதாக கூறியிருக்கிறார்.

திரைக்கு பின் போராட்டம்...அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட தென்னிந்திய நடிகர், நடிகைகள்.. | South Celebrities Battles With Rare Illnesses

நடிகை அனுஷ்கா, சூடோபுல்டா எஃபெக்ட் என்ற அரியவகை நரம்பியல் குறைபாட்டால் பாதிப்படைந்ததாகவும் சிரிப்பு நோய் என்று அழைக்கப்படும் இந்த பாதிப்பு, உணர்ச்சிகளோடு சம்பந்தமின்றி கட்டுப்படுத்த முடியாது. திடீர் சிரிப்பு, அழுகை ஏற்படும் என்றும் கூறியிருக்கிறார்.

விஷ்ணு விஷால், மம்தா

நடிகர் விஷ்ணு விஷால், கடந்த 3, 4 ஆண்டுகளாக ஒருநாள்பட்ட நோய் எதிர்ப்பு பிரச்சனையுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்திருந்தார். இதற்காக தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் வெளிப்படையாக கூறினார்.

திரைக்கு பின் போராட்டம்...அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட தென்னிந்திய நடிகர், நடிகைகள்.. | South Celebrities Battles With Rare Illnesses

நடிகை மம்தா, இருமுறை ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தபோது தோலின் நிறமிகளை இழக்கக்கூடிய விட்டிலிகோ என்ற வெண்புள்ளி பாதிப்பினை சந்தித்தேன் என்று கூறியிருந்தார்.