கன்னத்தில் அறைந்த நடிகை ஸ்ரீபிரியா.. கருணாநிதி சொன்ன வார்த்தை.. எம் எஸ் பாஸ்கர்
தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் எம் எஸ் பாஸ்கர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சினிமா வாய்ப்பு இல்லாத சமயத்தில் நண்பர் ஒருவர் மூலம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அப்படி சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் 4 வாரம் மட்டும் ஷூட்டிங் இருக்கிறது என்று சென்றிருந்தேன். அந்த சீரியலில் நடிகை ஸ்ரீபிரியா மேடம், ஏதாவது பேசும் போது என் கன்னத்தில் அடித்துவிடுவார். நான் தான் உங்க மூக்கை தொடவில்லையே ஏன் அடித்தீர்கள் என்று கேட்பேன், அதை எல்லாம் மறக்க முடியாது.
அதேபோல் முதல் வாரத்தில் என் நடிப்பை பார்த்துவிட்டு கலைஞர் கருணாநிதி ஐயா, நடிகை ராதிகாவிடம் போன் போட்டு என்னை பற்றி விசாரித்திருக்கிறார். என் காட்சிகள் 4 வாரங்களுக்கு மட்டும் இருக்கும் என்று கூறியதற்கு, இல்லை இல்லை பட்டாபி கேரக்டரில் எம் எஸ் பாஸ்கர் பின்னி எடுக்கிறார்.
சீரியல் முழுக்க வையுங்கள் என்று ராதிகாவிடம் கூறியதால்தான் சீரியல் முழுக்க வந்தேன். முதலில் எனக்கு பதில் வேறொரு நடிகரைதான் நடிக்க வைக்க முடிவு செய்தனர். அவர் சில கண்டீசன் போட்டதால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்து பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியதாக எம் எஸ் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.