நடிகை ஹன்சிகா மோத்வானியின் ரீசெண்ட் கிளிக்ஸ்..இதோ..
ஹன்சிகா மோத்வானி
குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடிக்க தொடங்கி பின் தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் ஹன்சிகா தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2, மான் கராத்தே, மீகாமன், புலி, ஆம்பள, வாலு உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
ஹன்சிகா கடந்த 2022 டிசம்பர் 4ம் தேதி சோஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக ஜெய்ப்பூரில் இருக்கும் அரண்மனையில் நடைபெற்றது. திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் கூட ஆகாத நிலையில் இருவரும் தற்போது பிரிந்துவிட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.
ரீசெண்ட் கிளிக்ஸ்
தற்போது, சிகப்புநிற ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி.


