ஐபிஎல் 2027 தொடரில் இருந்து ஓய்வு பெற்றார் எம் எஸ் தோனி..இனிமேல் ஆலோசகராக தொடர்வார்..

MS Dhoni Chennai Super Kings Cricket Indian Cricket Team IPL 2026
By Jai Nov 17, 2026 10:39 AM GMT
Report

ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக எம் எஸ் தோனி அறிவித்துள்ளது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மெண்டராக எம் எஸ் தோனி நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.

ஐபிஎல் 2027 தொடரில் இருந்து ஓய்வு பெற்றார் எம் எஸ் தோனி..இனிமேல் ஆலோசகராக தொடர்வார்.. | Ms Dhoni Has Ended His 19 Year Ipl Career

எம் எஸ் தோனி ஓய்வு

2027 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16 ஆம் தேதி கோவாவில் நடக்கவுள்ள நிலையில், ஐபிஎல் அணிகளின் வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு விவரங்களை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் 10 அணிகள் மும்முரம் காட்டி வருகிறது. சென்னை அணியின் வீரராக இருக்கும் எம் எஸ் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல் 2027 தொடரில் இருந்து ஓய்வு பெற்றார் எம் எஸ் தோனி..இனிமேல் ஆலோசகராக தொடர்வார்.. | Ms Dhoni Has Ended His 19 Year Ipl Career

45 வயதான மகேந்திர சிங் தோனி 2008ல் இருந்து ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். 5 ஐபிஎல் கோப்பையும், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பையும் தன் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ளார் எம் எஸ் தோனி.

தற்போது ருதுராஜ் கெய்க்வாட் தலையில் சென்னை அணி விளையாடி வரும் நிலையில், தோனியின் கடைசி சீசனாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஐபிஎல் 2027 தொடரில் இருந்து ஓய்வு பெற்றார் எம் எஸ் தோனி..இனிமேல் ஆலோசகராக தொடர்வார்.. | Ms Dhoni Has Ended His 19 Year Ipl Career

கடந்த சீசனிலும் கலமிறங்காத தோனியின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் எம் எஸ் தோனி ஓய்வு பெற்றது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அப்படி இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Gallery