ஆண்கள் கழிப்பறையில் MS தோனி போட்டோ! மதுரைக்காரன்னா பெரிய குசும்பன்னு இப்பதான் தெரியுது?
MS Dhoni
By Edward
மதுரைக்கு பேர் போனது மல்லி என்றாலும் திருவிழா, திருமணவிழா, என பல்வேறு விழாக்களை பிரம்மாண்ட முறையில் நடத்தி அதிரவைத்து விட்டுவார்கள். அதேபோல் சினிமா நடிகர்கள் அஜித், விஜய், ரஜினி ரசிகர்கள் போஸ்டர் மதுரையில் பயங்கர பேமஸ்.
அப்படி சமீபத்தில் கூட ராஜாஜி சிறுவர் பூங்கா வளாகத்தில் நாய் காதல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவுப்பு பலகை விமர்சனத்திற்குள்ளாகியது. அதன்பின் சில நாட்களில் அது எடுக்கப்பட்டது.
தற்போது மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கழிப்பறை கட்டிடத்தின் ஆண்கள் கழிவறையில் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம் எஸ் தோனியின் புகைப்படம் அமைந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவு பெரிய லெஜண்ட் கிரிக்கெட்டரின் புகைப்படத்தை இதற்காக பயன்படுத்துவதா என்று பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
