கேப்டன் கூல் எம் எஸ் தோனி!! IPL-லில் கோபமடைந்த 3 தருணங்கள்..
ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக எம் எஸ் தோனி அறிவித்துள்ளது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மெண்டராக எம் எஸ் தோனி நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ள நிலையில், தோனி கோபப்பட்ட 3 நிகழ்வுகளை பார்ப்போம்..

கேப்டன் கூல் எம் எஸ் தோனி
2027 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16 ஆம் தேதி கோவாவில் நடக்கவுள்ள நிலையில், ஐபிஎல் அணிகளின் வீரர்கள் தக்கவைப்பு, விடுப்பு விவரங்களை நேற்று வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர். 10 அணிகளும் தங்கள் அணியின் விவரங்களை வெளியிட்டனர்.
இதனையடுத்து சென்னை சூப்பர் சிங்கர் அணியில் தோனி தன் ஓய்வை அறிவித்து, ஐபிஎல் 2027 போட்டியில் இருந்து வெளியேறியதோ, சென்னை அணியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தோனியின் ஓய்வால் ரசிகர்கள் மற்றும் சினிமா, அரசியல் பிரபலங்கள் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் கோப்டன் கூல் என்று இந்திய ரசிகர்களால் புகழப்படும் தோனி, கோபப்பட்ட 3 தருணங்கள் என்ன என்பதை பார்ப்போம்..
கோபமடைந்த 3 தருணங்கள்
2019ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது மிட்செல் சாண்ட்னர் பேட்டிங் செய்தபோது பென் ஸ்டோக்ஸ் வீசிய ஒரு பால் ஃபுல் டால்ஸ் பந்தாக வீசினார். ஆனால் நடுவர் அதற்கு நோ-பால் கொடுத்து பின் லெக்-அம்பயருடன் கலாந்தாலோசித்து முடிவை திரும்பப்பெற்றார்.

இதனால் கோபப்பட்ட தோனி, பொறுமையை இழந்து பெவிலியனில் இருந்து மைதானத்திற்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். எதையும் பொருட்படுத்தாமல் கோபப்பட்ட தோனிக்கு போட்டியின் 50 சதவீத ஊதியத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டது.

பதற்றமான சூழலில்கூட கூலாக இருக்கும் தோனி, 2019ல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், 160 ரன்கள் இலக்கை எதிர்கொண்டது. சென்னை அணியின் வீரர் தீபக் சாகர் கடைசி ஓவர் போட நோ-பால் வீசினார். அதனால் கோபப்பட்ட தோனி, தீபக் சாகரை கடுமையான வார்த்தைகளால் திட்டியிருந்தார்.

ஐபிஎல் 2010 தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாய் அணியின் இலக்கை சேஸ் செய்தப்பின் தோனி தன்னுடைய ஆக்ரோஷமான செய்கை வெளிப்படுத்தி இருப்பார். ஹெல்மெட் மீது கைகளாக தன் முகத்தில் அடித்திருப்பார்.