பயந்து வாழும் நிலை இருக்கு..மாறணும்!! நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஆதங்கம்..

Indian Actress Urvashi Rautela Cinema News
By Jai Nov 17, 2026 12:45 PM GMT
Report

ஊர்வசி ரவுத்தேலா

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் மாடலாகவும் திகழ்ந்து வரும் ஊர்வசி ரவுத்தேலா, சினிமாத்துறையில் பயந்து வாழும் நிலை உள்ளது, இந்த நிலை மாற வேண்டும் என்று கூறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பயந்து வாழும் நிலை இருக்கு..மாறணும்!! நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஆதங்கம்.. | Film Industry Where One Has To Live Fear Urvashi

மாடல்துறையில் அறிமுகமாகி சிறுவயதில் நடிக்க ஆரம்பித்து பிரபலமானவர் தான் நடிகை ஊர்வசி. பல ஃபேஷன் ஷோக்களிலும் பார்ட்டிகளிலும் கலந்து கொண்டு வரும் ஊர்வசி, சினிமாத்துறையில் நடக்கும் சில நடைமுறைகள் பற்றி பேசியுள்ளார்.

பயந்து வாழும் நிலை

அதில், சினிமாவில் நடிகர்கள் என்ன செய்தாலும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள், ஆனால் நடிகை விஷயத்தில் அப்படி இருப்பதில்லை. தெரியாமல் ஏதாவது தவறு செய்துவிட்டாலும், அதை பெரிதுபடுத்தி விமர்சிப்பதால் நடிகைகள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

பயந்து வாழும் நிலை இருக்கு..மாறணும்!! நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஆதங்கம்.. | Film Industry Where One Has To Live Fear Urvashi

நடிகர்களைவிட நடிகைகள் தான் விமர்சனங்களுக்கு அதிகம் பயந்து வாழும் நிலை இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும், ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகைகளை கொண்டாட வேண்டும் என்றுகூட நான் எதிர்பார்க்கவில்லை.

குறைந்தபட்சம் அவர்கள் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைக்காமல் இருந்தாலே போதும் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் ஊர்வசி ரவுத்தேலா.