முகேஷ் அம்பானியின் வலக்கரமாக இருந்தவர்! இப்போது துறவி!! ஆண்டு சம்பளமே இத்தனை கோடி?
முகேஷ் அம்பானி வலக்கரம்
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூலம் மிகப்பெரிய குழுமத்தை நடத்தி வருகிறார். அவருக்கு பக்கபலமாகவும் வலக்கையாகவும் இருந்தவர் தற்போது உலகத்தை துறந்து தீட்சை எடுக்க முடிவெடுத்துள்ளார்.
அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் பதவியில் இருந்தவர் தான் பிரகாஷ் ஷா. பல ஆண்டுகளாக முகேஷ் அம்பானியின் வலது கரமாக செயல்பட்டு வந்தார்.
பிரகாஷ் ஷா
இந்நிலையில் பல ஆண்டுகளாக தான் தீட்சை எடுக்க ஆர்வம் கொண்டிருந்தார் பிரகாஷ் ஷா. ஆனால் கோவித்19 தொற்றுநோய் காரணமாக அதை நிறுத்தி வைத்திருந்தார். தீட்சை என்பது ஒரு சடங்கு, இதன்மூலம் ஒருவர் சந்நியாசத்தை கடைப்பிடிக்க சபதம் எடுக்கிறார்.
ஒருவர் தீட்சை எடுத்தவுடன் அவர்களின் குறிக்கோள் எந்த பாவத்தையும் செய்யாமல் முக்தியை அடைய நல்ல செயல்களை செய்வதாகும். பிரகாஷ் ஷாவை வேலைக்கு சேர்ப்பதற்கு முன் அவருக்கு நீண்ட மற்றும் புகழ்பெற்ற வாழ்க்கைப்பின்னணி, ஈர்க்கக்கூடிய கல்வி பின்னணியும் இருந்துள்ளது.
வேதியியல் பொறியியல் பட்டம் பெற்றப்பின் ஐஐடி பாம்பேயில் முதுகலைப்பட்டம் பெற்றார். பிரகாஷ் ஷாவுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், ஒரு மகன் நீண்ட காலத்திற்கு முன் தீட்சை எடுத்துள்ளார். மற்றொரு மகன் திருமணமாகி ஒரு மகனைப்பெற்றுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய மனைவி நைனா ஷாவுடன் தீட்சை எடுத்துக்கொண்டார். ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸில் முக்கிய நபராக திகழ்ந்து வந்த பிரகாஷ் ஷா, பதவிகளை துறந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரின் ஆண்டு சம்பளமாக ரூ. 75 கோடி என்று கூறப்படுகிறது.