67 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் சக்திமான் நடிகர்.. காரணம் இதுதானா

Actors
By Karthick Raja May 04, 2026 03:30 AM GMT
Report

90ஸ் கிட்ஸின் மனதை கவர்ந்த சூப்பர்ஹீரோ சக்திமான். இதில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் முகேஷ் கண்ணா. இவருக்கு தற்போது 67 வயது ஆகிறது. ஆனால், இதுவரை அவர் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார். இந்த நிலையில், ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "நீங்கள் திருமணம் செய்து கொண்டால் committed தான். ஒரு பெண் பதிவிரதை ஆக இருக்க வேண்டும் என மக்கள் சொல்வார்கள். ஆனால் ஆண் அதே போல பதிவிரதத்தில் இருக்க வேண்டும் என யாராவது சொல்கிறார்களா".

67 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் சக்திமான் நடிகர்.. காரணம் இதுதானா | Mukesh Khanna About His Marriage

"I love my wife என சொல்லிவிட்டு வேறு ஒருவருடன் சுற்றுகிறார்கள், cheating செய்கிறார்கள். திருமணத்தின் மீது எனக்கு அதிகம் நம்பிக்கை இருக்கிறது. திருமணம் செய்யவில்லை என்றால் அதன் மீது நம்பிக்கை இல்லை என மக்கள் நினைக்கிறார்கள்".

"மனைவி என்பவள் தற்செயலாக வருபவள் அல்ல. அது தலையெழுத்தில் இருக்கும். என்ன நடக்க வேண்டுமோ அது தான் நடக்கும். என்னை திருமணம் செய்ய வேண்டிய பெண் எங்காவது இருப்பார். எப்போது விதி எங்களை ஒன்று சேர்க்கிறதோ; அது நடக்கும்" என முகேஷ் கண்ணா கூறியுள்ளார்.