என்னது இந்த முல்லையும் அவுட்டா! பட வாய்ப்புக்காக பிரபல சீரியலை தூக்கி எறிந்த நடிகை

Serial Mullai Pandian stores Kaaviyaarivumani Vjchithra
By Edward Oct 21, 2021 03:44 AM GMT
Report

தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் பெரும்பாலும் வட இந்திய சீரியலை ரீமேக் செய்து வருவது இயல்பாகி விட்டது. அப்படி பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

அண்ணன் தம்பி பாசத்தை குடும்பத்தோடு பார்க்க வைக்கும் இந்த சீரியல் மக்கள் இடையில் நல்ல வரவேற்பும் டி ஆர் பியில் நல்ல இடத்தையும் பெற்று தந்து வருகிறது. இந்த சீரியலில் முதலில் முல்லையாக vj சித்ரா நடித்தார்.

அவர் இறந்த பின் அவருக்கு பதிலாக பாரதிகண்ணம்மா என்னும் சீரியலில் நடித்து வந்த காவியா அறிவுமணி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் போகப்போக ஆதரவை பெற்று ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வருகிறார். இதையடுத்து நடிகை காவியா அறிவுமணி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. அதன் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை காவியா அறிவுமணிக்கு, நயன்தாரா- விக்னேஷ் சிவன் மற்றும் கவின் இவர்களின் தயாரிப்பில் ‘ஊர்க்குருவி’ என்னும் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக அதனால் இரண்டிலும் கவனம் செலுத்தவும் கால்ஷீட் கொடுக்கமுடியவில்லை என்ற காரணத்தாலும் விலகவுள்ளாதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதில் யார் இனி நடிக்க வைப்பார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.