'என் செல்ல பேரு ஆப்பிள்' பாடலில் நடனமாடிய நடிகை முமைத் கானை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..
விஜய் நடித்து வெளிவந்த போக்கிரி படத்தில் வரும் 'என் செல்ல பேரு ஆப்பிள்' என்கிற பாடலில் நடனமாடியவர் நடிகை முமைத் கான். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 'என் பேரு மீனாகுமாரி', 'டாடி மம்மி வீட்டில் இல்ல', 'தொட்டதெல்லாம் தூள் பறக்குது மம்பட்டியான்' போன்ற பாடல்களுக்கு இவர் நடனமாடியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என எல்லா மொழிகளிலும் பிரபலமாக இருந்த அவர் திடீரென படங்களில் நடிக்கவில்லை. 30 வயதில் விபத்தில் சிக்கிய நடிகை முமைத் கானுக்கு தலையில் காயம் ஏற்பட்டு கோமாவுக்கு சென்றுவிட்டாராம். 15 நாட்கள் கோமாவில் இருந்த அவர் அதன் பின் சுயநினைவுக்கு வந்துள்ளார்.

சுயநினைவுக்கு வந்தாலும், அவர் மூளையில் 5 நரம்புகள் வெடித்ததனால் அவர் 7 வருடங்களுக்கு எந்த வேலையும் செய்ய கூடாது என மருத்துவர்கள் கூறிவிட்டார்களாம். சின்ன வெயிட் கூட தூக்க கூடாது, வலிப்புக்காக 7 வருடங்களாக மருந்துகள் சாப்பிட்டு வந்திருக்கிறேன் என அவர் கலக்கத்துடன் பேட்டி கொடுத்துள்ளார்.

சினிமாவே வேண்டாம் என ஒதுங்கிய முமைத் கான் தற்போது ஹைதராபாத்தில் மேக்அப் மற்றும் ஹேர் ட்ரெஸ்ஸிங் பயிற்சி இன்ஸ்டிடுயூட் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறாராம்.