தமிழ் சினிமாவில் ஒரே நாளில் நிகழ்ந்த இரு பெரும் சோகம்!! அதிர்ச்சியில் திரையுலகினர்..
இன்று தமிழ் சினிமாவை சேர்ந்த இருவர் உயிரிழந்திருப்பது திரையுலகத்தினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழில், தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, பொக்கிஷம், ஆட்டோகிராஃப் உள்ளிட்ட ஹிட் படங்களுக்கு கிளாசிக் பாடல்களுக்கு இசையமைத்தவர் தான் சபேஷ்.
தன்னுடைய சகோதரர் தேவாவுடன் உதவியாளராக பணியாற்றி தன்னுடைய இன்னொரு சகோதரரான முரளியுடன் இணைந்து சபேஷ் - முரளி என்ற பெயரில் தமிழில் இசையமைத்து வந்தார்.
2001ல் சரத்குமார் நடிப்பில் வெளியான சமுத்திரம், நைனா, பாறை, அயோத்யா உள்ளிட்ட படங்களுக்கு சபேஷ் - முரளியின் இசை தொடங்கியது. மேலும் ஜோடி, பாரிஜாதம், தலைமகன், அரசாங்கம், சிந்து சமவெளி, அன்னக்கொடி, கொடி வீரன், திருமணம் போன்ற படங்களுக்கு பின்னணி இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் சபேஷ் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டநிலையில், சிகிச்சை பலனின்றி தன்னுடைய 68 வது வயதில் உயிரிழந்திருக்கிறார் சபேஷ்.
மனோரமாவின் மகன்
அவருக்கு முன்னதாக நடிகை மனோரமாவின் மகன் பூபதி மூச்சு திணறல் காரணமாக இன்று காலை 10.15 மணியளவில் காலமானார். இந்த இரு பெரும் துயரச்செய்து திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.