வேலையில்லாம ஈ ஓட்டிக்கிட்டு இருந்தேன்..அவர் தான்!! விஜய்யின் இசையமைப்பாளர் ஓபன் டாக்..
மணி வர்மா
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் தான் இசையமைப்பாளர் மணி வர்மா. ஷாஜஹான், யூத், திருப்பாச்சி, போக்கிரி, சுறா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருந்த மணி வர்மா, சூர்ய வம்சம் உள்ளுட்ட சீரியல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீம் பாடலை இவர் தான் இசையமைத்திருக்கிறார்.
சென்னை லவ் ஸ்டோரி தெலுங்கு படத்தில் வரும் குருதுண்டா பாடல் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மணி வர்மா, சில விஷயங்களை கவலையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறேன்
அதில் அவர் பேசுகையில், தற்போது எல்லா தினமும் காலையில் எழுந்து ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

அப்படியிருக்கும் போதுதான் சாய் ராஜேஷ் என்னை தேடி வந்து, நான் தான் பேபி படத்தை இயக்கிவர் என்று பேசும்போது, எதற்காக என்னிடம் பேசுகிறார் என்று நினைத்தேன்.
நீங்கள் மறுபடியும் இசையமைக்க வேண்டும் என்று கூறினார் சாய் ராஜேஷ். என் ஹார்மோனிய பெட்டியை எங்கு வைத்தேன் என்று கூட எனக்கு தெரியவில்லை, அதை அவர் தான் தேடிக்கண்டுபிடித்து தூசு தட்டி என்னை மீண்டும் இசையமைக்கச் சொன்னார். ஒரு டியூன் போட்டதுமே எனக்குள் ஏதோ புதிதாக வந்தது போன்று உணர்ந்தேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார் மணி வர்மா.