அப்பா-லாம் வேண்டாம்!! அதெல்லாம் இல்லாம நரக வாழ்க்கை! மறுபக்கத்தை கூறி அழுத நடிகை ஷோபனா..
சிறுசிறு ஆடிஷன்களை கூட விடாமல் வாய்ப்பு தேடி வந்த நடிகை ஷோபனா தற்போது முத்தழகு என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் கருப்பான தோற்றத்தை பார்த்து பலர் என்னை நிராகரித்தார்கள் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். சமீபத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஷோபனா பல எமோஷனலான விசயங்களை பகிர்ந்து அனைவரையும் அழ வைத்திருக்கிறார்.

என் கூட அப்பா இல்லை, அம்மா கஷ்டப்பட்டு தான் வளர்ந்தேன். அப்பா துணை எல்லோருக்கும் தேவை தான். கல்லூரியில் தாத்தா விட்டில் தான் வளர்ந்தேன் படித்தேன். கல்லூரிக்கு செல்லும் போது எனக்கு சாப்பாடு இருக்காது. என் ஃபிரண்ட் சாப்பிடும் போது நான் அங்கு சென்றால், சாப்பாடு ஒளிச்சி வைங்க என்று கூறுவார்கள்.
அப்போது இருக்கும் போது, என் குடும்பத்திற்காக மீடியா பக்கம் சென்றேன். வீடியோக்களை ஆப்களில் போடுவேன். வெல்கம் கேர்ள் என்று பல விசயங்கள் செய்தேன். ஐடியில் வேலை செய்து 6 மாதத்தில் வெளியேற்றினார்கள். நிறைய சீரியல் ஆடிஷனுக்கு சென்றிருக்கிறேன். நீ எல்லாம் சீரியல் நடிகையா? என்று இயக்குனர் சொன்னார்.

அப்படி தான் முத்தழகு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சம்பாதித்து முதல் ஆளாக கார் வாங்கினேன், நான் உழைத்து சொந்த வீடும் வாங்கியதாக எமோஷ்னலாக ஷோபனா பேசியிருக்கிறார். மேலும் பேசிய ஷோபனா, அப்பாலாம் வேண்டாம், என் கணவர் தான் அப்பாவாக இருப்பாங்க. எனக்கு வரும் வாழ்க்கை எனக்கானவராக இருக்க வேண்டும், நானும் இருப்பேன்.