முள்ளு குத்துனா நடக்க முடியாதா! சீரியலா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

serial television Muthazhagu
By Edward Feb 14, 2022 11:45 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு பல சீரியல்களை அறிமுகப்படுத்தி ஒளிப்பரப்பு செய்து வருகிறது. அதில் ஒன்றாக இருப்பது முத்தழகு சீரியல். கதாநாயகன கதாநாயகி இருவரும் விருப்பம் இல்லாமல் நிர்பந்தத்தால் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அப்படி இருவரின் நெருக்கத்தை உருவாக்க பாட்டி பிளான் போடுகிறார். கோவிலுக்கு செல்லும் படிக்கட்டில் முள்ளை போட்டு அதை முத்தழகு காலில் குத்தினால் அதை கணவன் தூக்கி செல்வான் என்ற திட்டம் தான்.

ஆனால் கதை மாறி கதாநாயகன் முள்ளை மிதிக்க கதாநாயகி அவரை தூக்கிக்கொண்டு கோவில் படிக்கட்டில் ஏறுகிறார். இந்த காட்சியை தொலைக்காட்சி வெளியிட்டதை பார்த்த நெட்டின்சகள் கண்டபடி கலாய்த்து தள்ளியுள்ளனர்.

சீரியலா இருந்தாலும் ஒரு நியாயம் தர்மம் வேண்டாமா என்று கேலி செய்து வருகிறார்கள்.