கைக்கால் கட்டி ஒண்ணும் பண்ணலையே!! வஹிதா விளாசிய சிறகடிக்க ஆசை நடிகர்..
முத்துக்குமரன் - வஹிதா விவகாரம் தொடர்பான இணையத்தில் பல வீடியோக்களும், ஆடியோ பதிவுகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரபலங்கள் இதுகுறித்து பேசி வருகிறார்கள். சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் ரோலில் நடித்து வரும் நடிகர் ஸ்ரீதேவா, வீடியோ ஒன்றினை வெளியிட்டு பேசியுள்ளார்.

ஸ்ரீதேவா
அதில், இரண்டு பேரும் பழகியது, அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். முத்துக்குமரன் மீடியாவில் வேலை செய்கிறார் என்பதற்காக, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை சோசியல் மீடியாக்களில் கொண்டு வந்து அவருடைய கெரியரை ஏன் பாதிக்க வேண்டும். தனிப்பட்ட பிரச்சனையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிடலாம். மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம். கைக்கால் கட்டி ஒண்ணும் பண்ணலையே.

முத்துக்குமரனை போன் செய்து அழைத்து என்ன நடந்தது என்று விசாரித்திருக்கலாம், ஆனால் எதையும் செய்யாமல் நேரடியாக சோசியல் மீடியாக்களில் வீடியோக்களை வெளியிட்டு அவருடைய கெரியரை பாதிப்பது ஏன்? முத்துக்குமரன் ஊடகத்துறையில் பல முயற்சிகளுக்குப்பின் தனக்கான ஒரு இடத்தை பிடித்திருப்பார்.
அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் என்ன சம்பந்தம். உங்களுக்குள் நடந்த விஷயத்தை எதற்காக மீடியாவுக்குள் கொண்டு வரவேண்டும். அவர் மீடியாவில் இருப்பதால் அவருடைய கெரியரை பாதிக்க வைக்க வேண்டுமா? என்று ஆவேசமாக பேசியுள்ளார்.