நான் பணம் வாங்கி உன்னிடம்..தாலியோடு வா..இல்ல!! முத்துக்குமரனை மிரட்டிய பெண்..
தாலியுடன் வா, செய்யவில்லை என்றால் உன்னிடம் எப்படியும் போராடுவேன் என்று முத்துக்குமரன் விசயத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வஹிதா.
முத்துகுமரனை மிரட்டிய பெண்
பிக்பாஸ் பிரபலமான முத்துகுமரன் பற்றிய விஷயம் தான் சமீபகாலமாக சோசியல் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தன்னுடன் உடல் உறவு வைத்துக் கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக வஹிதா என்ற பெண் சோசியல் மீடியாக்களில் சில மாதங்களாக பதிவுகளை வீடியோகளை பதிவிட்டு வருகிறார்.
இதுகுறித்து மெளனம் காக்கும் முத்துக்குமரனையும் சோசியல் மீடியாக்களில் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் மேலும் ஒரு பதிவினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் வஹிதா.
வஹிதா
அதில், நான் விபச்சாரி இல்லை, உன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு ஒன்றும் படுக்கவில்லை. நான் காதலற்ற உறவையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஒரு கண்டீஷன், நான் கேட்டு ஏற்றது தாலி மட்டுமே. அதனால் நீ என் உடலை இலவசமாக பயன்படுத்தி இருந்தால் அதிலிருந்து நீ தப்பிக்க நினைத்தால் உன்னை விடமாட்டேன்.
தாலியுடன் என்னிட வந்துவிடு, இல்லை என்றால் அதற்காக உன்னை தேடி வந்து போராடுவேன். நண்பர்களே அவன் சொந்த ஊர் தகவல் இருந்தால் எனக்கு DM-ல் அனுப்புங்கள் என்று காரசாரமாக எழுதியிருக்கிறார் வஹிதா.