என் தங்கைக்கு நடந்த கொடுமையால் ரோட்டுக்கே போக பயம்!! பிரபல நடிகை ஓப்பன்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கங்கனா ரணாவத். தற்போது சந்திரமுகி படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் 17 வயது பள்ளி மாணவியை டெல்லி துவாரகா இடத்தில் மர்ம நபர் ஆசிட் வீசி தப்பி சென்ற செய்தி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பல நட்சத்திரங்கள் கடுமையான கண்டத்தை தெரிவித்து வருகிறார்.
அந்தவகையில் நடிகை கங்கனா ரணாவத் தன் தங்கைக்கு நடந்ததை போன்றே தற்போது இந்த மாணவிக்கும் நடைபெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.
21 வயதில் என் தங்கை ரங்கோலி சந்தேல் ரோட்டில் நடந்து செல்லும் போது மர்ம நபர் ஆசிட் வீசிசென்றதால் முகம் முழ்க்க பாதிப்பானது. 52 சர்ஜரிகள் செய்தும் கண் மட்டும் அதிகமாக பாதிப்பானது.
என் கண் முன்னாலே இந்த சம்பவம் நடைபெற்றதால் அப்போதில் இருந்து ரோட்டில் நடக்க பயமாக இருக்கும். கார், பைக் என வெளியில் சென்றால் கூட முகத்தை மூடிக்கொண்டு நடங்கிப்போவேன் என்று கூறியுள்ளார்.