சொந்த வீடு வாங்கியுள்ள மைனா நந்தினி - யோகேஷ் ஜோடி.. அவர்கள் வெளியிட்ட வீடியோ இதோ

Myna Nandhini
By Karthick Raja May 07, 2026 03:30 AM GMT
Report

மைனா நந்தினி

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து இன்று ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகை மைனா நந்தினி. இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார்.

இதை தொடர்ந்து சின்னத்தம்பி, அரண்மனை கிளி என சீரியல்களில் நடித்து வந்தார். வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்து வந்த இவருக்கு, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

சொந்த வீடு வாங்கியுள்ள மைனா நந்தினி - யோகேஷ் ஜோடி.. அவர்கள் வெளியிட்ட வீடியோ இதோ | Myna Nandhini Bought New House

இதன்பின், அரண்மனை 3, விக்ரம், விருமன், தலைவன் தலைவி என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

சொந்த வீடு

கடைசியாக நந்தினி தனது கணவர் யோகேஸ்வரனுடன் இணைந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான கேம் ஷோவில் கலந்துகொண்டு 2வது இடத்தை பிடித்திருந்தார்கள். இப்போது இருவரும் சேர்ந்து ஒரு குட் நியூஸ் தெரிவித்துள்ளனர்.

அதாவது இருவரும் நீண்ட நாள் உழைப்பிற்கு பிறகு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்களாம். அந்த மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர வீடியோ வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ: