காசு பொழைக்க என்ன வேனா பண்ணலாமா? மைனா நந்தினி கண்வவரை கண்டபடி திட்டும் நெட்டிசன்கள்
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகிய சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நந்தினி. ஒருசில சீரியல்களில் நடித்து பிரபலமான நந்தினி, சிவகார்த்திகேயனின் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் நடித்து வந்தார்.
அதன்பின் சில அப்டங்களில் நடித்து வந்த மைனா நடன இயக்குனர் யோகேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டு வந்தனர்.
சூப்பர் சிங்கர், மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வந்த மைனா நந்தினி, கணவருடன் சேர்ந்து யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார்.
இதன்மூலம் காசு சம்பாதித்து வரும் மைனா மற்றும் அவரது கணவர் சில பொருட்களை விளம்பரம் செய்தும் வருகிறார்கள். அப்படி ரம்மி சம்மந்தப்பட்ட விளையாட்டிற்கு விளம்பரம் கொடுத்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் காசு சம்பாதிக்க வேறு வேலையே இல்லையா என்று கடுமையாக திட்டி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ஏற்கனவே இதே பிராடக்டை நடிகர் சரத்குமார் விளம்பரம் செய்தது சர்ச்சைக்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.