சமந்தாவை ஆட்டிப்படைக்கும் மயோசிடிஸ்!! இப்ப ஒரு நாட்டுக்கே வந்தாச்சாம்..
சமந்தா - மயோசிடிஸ்
தமிழில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமானார் சமந்தா. சமந்தா கடந்த ஆண்டு தான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கபட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். தற்போது அதற்காக தீவிர சிகிச்சை செய்ய படங்களின் ஷூட்டை முடித்துவிட்டு வெளிநாட்டுக்கு செல்லவுள்ளாராம். நடிகை சமந்தாவுக்கு வந்ததால் தான் மயோசிடிஸ் என்ற அரியவகை நோய் இருப்பதே பலருக்கும் தெரிய வந்தது.
அதென்ன மயோசிடிஸ்
உடல் தசைகளில் வீக்கம் ஏற்பட்டு கடைசியில் பலவீனமாக்கிவிடும். மயோசிடிஸ் என்பது எலும்புகளை இணைக்கூடிய தலைகளை தாக்கும் மயோபதி நோயாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு தோல் பகுதி இந்த நோய் உண்டாகுமாம். கை, கால், தோல், இடுப்பு, வயிறு, முதுகுத்தண்டில் இருக்கும் தசைகளையும் இது பாதிக்கும். இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்று எந்த காரணமும் தெரியவில்லை. ஆனால் சுற்றுச்சூழல், மரபணு இந்த நோய் ஏற்பட காரணமாக இருக்கும். ஆனால் இது தொற்று நோய் கிடையாதாம்.
சமந்தா டூ பெரு
இந்நிலையில் சமந்தாவை ஆட்டிப்படைத்த மயோசிடிஸ் நோய் தற்போது ’பெரு’ நாட்டில் குய்லின் - பார் சிண்ட்ரோம் என்ற அரிய வகை நோய் 165 பேருக்கு பரவியுள்ளதாம். இந்த நோய் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தையே தாக்க தொடங்கியுள்ளதாம். வயதானவர்கள், ஆண்களுக்கு இந்த நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாம். இதனால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளார். நோயின் தீவிர தன்மையை உணர்ந்த பெரு நாட்டில் 95 நாட்கள் சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்துள்ளதாம்.