நிறைய பெண்கள் கால் செய்து சொன்ன அந்த வார்த்தை!! இயக்குநர் மிஷ்கின் பகிரங்க மன்னிப்பு..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வரும் இயக்குநர் மிஷ்கின், பாட்டில் ராதா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது மிஷ்கினின் பேச்சும், படத்துக்கும் துளிக்கூட சம்பந்தமேஇல்லை என்றும் அவர் பேசிய கேட்டவார்த்தைகளுக்கும் எதிராக பலர் கொந்தளித்த விமர்சித்து வந்தனர்.
மிஷ்கின் பகிரங்க மன்னிப்பு
இந்நிலையில் பேட் கேர்ள் படத்தின் டீசர் லான்சின் போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிஷ்கின் பேசியுள்ளார். அப்போது, ஜோக்காக பேசியது, இரண்டு மூன்று வார்த்தை மேலே போய்விட்டது அவ்வளவுதான். நான் பேசும் போது கீழே இருந்த பத்திரிக்கையாளர்களும் கூட சிரித்தார்கள்.
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் டைட்டில் வைத்த போது ஏன் யாரும் கேட்கவில்லை என்றும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி பேசிய அந்த பேச்சை எதிர்த்து யாரும் பேசவில்லை.
கிட்டத்தட்ட 3 நாட்களில் 300, 500 பேர் எனக்கு கால் செய்தார்கள். அதில் நிறைய பெண்கள் போன் செய்து பத்திரமாக இருங்கள் என்று கூறினார்கள். 3 நாட்கள் எல்லா தொலைக்காட்சியிலும் நான் இருந்தேன். ரஜினி, கமல் சாரிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது.
ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சி
பிசாசு 2வில், என் குழந்தை ஆண்ட்ரியாவிடம் கதையை சொன்னேன். கதையில் நிர்வாண காட்சி இருக்கு என்றதும் நடிக்கிறேன் என்றாள். போட்டோஷூட் ஒரு பெண் தான் எடுத்தார், என் கதை மேல் இருந்த நம்பிக்கையில், அவள் நிர்வாணமாக வந்தாள்.
அதன்பின் அவளிடம், உன் நிர்வாணத்தை பார்த்த நான் கலையாக பார்ப்பேன், ஆண் இன்றைய இளைஞர்கள் அதை வேறுமாதிரி பார்ப்பார்கள் என்று அந்த காட்சியை எடுத்துவிட்டேன். உங்கள் அனைவரின் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு, உங்களை கடவுள் ஆக்குகிறேன் என்று மிஷ்கின் ஆதங்கமாக பேசியிருக்கிறார்.