ஷூட்டிங்கில் அந்த விசயத்தில் டார்ச்சர் செய்த மிஸ்கின்!! கடுப்பாகிய சிவகார்த்திகேயன் பட இயக்குனர்..
இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, மிஸ்கின் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களில் நடிப்பில் வெளியான படம் மாவீரன்.
தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் சுமார் 50 கோடி வசூலையும் ஈட்டியிருக்கிறது மாவீரன் படம். சமீபத்தில் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நடந்துள்ளது.
நிகழ்ச்சிக்கு படக்குழுவை சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிலையில் இயக்குனர் மிஸ்கின் மட்டும் பங்கேற்பவில்லையாம். அதற்கு என்ன காரணம் என்று பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியிருக்கிறார்.
மாவீரன் ஷூட்டிங் சமயத்தில் இயக்குனரிடம் கதையில் குறுக்கிட்டு டார்ச்சர் செய்திருக்கிறாராம். சிவகார்த்திகேயனுக்கு ரெஸ்ட் கொடுக்க சொல்லி நச்சரித்துக் கொண்டே இருந்துள்ளாராம்.
அதேபோல் இரவு ஷூட்டிங்கில் இயக்குனரை கூப்பிட்டு டிஸ்கஸ் செய்யவும் செய்திருக்கிறாராம். இதனால் உசாராகிய இயக்குனர் மடோன் எஸ்கேப் ஆகியிருக்கிறார்.
இதனால் மாவீரன் படத்தில் வேலையை செய்த உதவி இயக்குனர்கள், அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு கால் செய்து, யாரை வெச்சுன்னாலும் படம் எடுங்க மிஸ்கினை வைத்து எடுக்காதீங்க என்று கூறியிருக்கிறார்களாம் என்று அந்தணன் கூறியிருக்கிறார்.
இதனால் தான் மிஸ்கின் மாவீரன் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சிக்கு பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.