மனைவியை விவாகரத்து செய்யாமல் வேறொருவருடன் 10 வருடம் தொடர்பு.. இயக்குனர் மிஸ்கின் ஓப்பன் டாக்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் மிஸ்கின், இயக்கத்தை தாண்டி தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் விஜய்யின் லியோ படத்தில் வில்லன் ரோலில் நடித்தும் இருக்கிறார். அவர் இயக்கத்தில் பிசாசு 2 ஒருசில காரணங்களால் வெளியாகுவதில் தாமதமாகியுள்ளது.
இந்நிலையில் மிஸ்கின் சில ஆண்டுகளுக்கு முன் காதல் மற்றும் மனைவியிடம் இருந்து பிரிந்த சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். நடிகை சங்கீதா எடுத்த நேர்காணலில் காதல் பற்றி கேட்டுள்ளார். அதற்கு மிஸ்கின், பல காதல் இருக்கிறது. 12 வயதில் காதல், 16 வயதில் காதல், ஸ்கூல் முடித்தப்பின் காதல், கல்லூரியில் காதல், என் மனைவியை சந்திக்கும் போது காதல்.
அவரை சந்திக்கும் போது ஒரு பிரச்சனை வந்து முடியாது என்று கூறினார்கள். பின் வீட்டை விட்டு தனியாக வந்து, கஷ்டப்பட்டு இருந்த சமயத்தில் தான் கல்யாணம் செய்தேன். ஒரு காலக்கட்டத்தில் மனைவிக்கு எனக்கும் கருத்து வேறுபாடு. அவர் ரொம்ப நல்லவர்கள், இந்த இடத்தில் அவர்களை பற்றி பேசணும். நான் ஏன் அவரை பிரிந்தேன் என்று எனக்கே தெரியாது. ஒரு துளி கூட எனக்கு துரோகம் செய்யவில்லை, ஒரு கெட்டது செய்யவில்லை.
எனக்கு போர் அடித்துவிட்டது. சினிமா பக்கம் சென்றதால் அதை மிஸ் செய்துவிட்டேன். ஒருவேலை சினிமாவிற்கு வராமல் இருந்திருந்தால் மனைவியுடன் இருந்து இருப்பேன். இந்த போர்டம் (boredom) என்பது விவாகரத்து காரணம் என்பதே காரணம் இல்லை என்று தான் கூறுவேன். அவர்களை பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை எனக்கு ஒதுங்கிவிடலாம் என்று சொல்லி அப்படி இருக்கணும் என்று அப்பா பேச்சை கேட்டு இருக்க முடியாது.
அதன்பின் அதிலிருந்து வெளியில் வந்தேன், என் குழந்தையை விட்டு தான் வருகிறேன். பின் காதல் இல்லை, அதன்பின் ஒரு காதல் வந்தது. 10 வருடம் அந்த காதல் இருந்தது. அதை வெளியில் சொல்ல முடியாது. நானும் காதலித்தேன், பின் பிரிந்துவிட்டோம். தற்போது மகளை காதலிக்கிறேன். அவளுக்கு 18 வயதாகிவிட்டது என்று மிஸ்கின் தெரிவித்திருக்கிறார். விவாகரத்து செய்யாமல் மனைவியை விட்டு தள்ளி தான் இருக்கிறேன். என் மகள் இருவருக்கும் ஒரு பாலமாக இருக்கிறார்.