நாகரீகம் அறிவு இல்லாமல் இப்படியா நடந்து கொள்வது.. மேடையில் ஆணவத்தில் பேசிய இயக்குனர் மிஸ்கின்

Vijay Antony Mysskin
By Edward Aug 20, 2022 06:14 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முந்தைய காலகட்டங்களை பொறுத்தவரை நம் தமிழ் திரை இயக்குநர்கள் ,நடிகர்கள் போன்ற பிரபலமானவர்களை பார்ப்பது அவ்வளவு சுலபமானதாக இருக்காது. அவர்கள் எப்பொழுது வெளியே வருவார்கள் என்றும் மேடையில் பேசுவார்கள் என்றும் பலபேர் காத்துக்கொண்டு இருப்பார்கள்.

அவர்களும் மிகவும் பணிவாக தன்னடக்கத்துடன் நடந்துக்கொள்ளுவார்கள். எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டாகவும் இருப்பார்கள். ஆனால் இப்பொழுது இருக்கும் சில நடிகர்கள் மேடையில் பேசும் போது நாகரீகம் என்பது சுத்தமாக இல்லாமல் இருக்கின்றன. அந்தவகையில் இயக்குனரும் நடிகருமான மிஸ்கின் சமீபத்தில் பேசிய பேச்சு சர்ச்சையாகியுள்ளது.

யாரையும் மரியாதையாக பேசாமல் வாடா போடா இவன் அவன் என்று பேசுவது வழக்கம். அப்படி விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவுள்ள கொலை படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு சென்ற மிஸ்கின், விஜய் ஆண்டனி தம்பி உங்க படத்தை நான் பார்த்ததே இல்லை.

அவங்க கூப்பிட்டாங்கன்னு தான் வந்தேன் என்று கூறியுள்ளார். பல வெற்றிகளை கொடுத்த விஜய் ஆண்டனியை தரக்குறைவாக பேசுவது என்ன நியாயம். இயக்குனர்கள் இப்படித்தான் பேசுவார்களா? பெரிய இயக்குனராக இருந்தும் ஏன் இப்படி பேச வேண்டும் என்று பலர் மிஸ்கினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் தான் கே ராஜன் தயாரிப்பாளர் சங்கம் பேச தடை விதித்தது. அதேபோல் மிஸ்கினுக்கும் தடை கொடுங்கள் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.