பக்கத்து வீட்டு பையனை யாருக்கும் தெரியாமல் காதலித்து மாட்டிய நடிகை நதியா.. அவரே கூறிய உண்மை..
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா. தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நதியா தற்போது வரை இன்னும் இளமையுடன் தான் இருந்து வருகிறார்.
அப்படி நடிகை நதியா இதுவரையில் எந்த படத்தில் கிளாமராக நடித்ததே கிடையாது. தற்போது வரை இளமையுடன் இருந்து வரும் நடிகை நதியா தன் கணவர் பற்றி சுவாரஷ்யமான விசயத்தை பகிர்ந்துள்ளார். அதில், சினிமாவிற்கு நான் அறிமுகமாவதற்கு முன்பே என்னுடைய கணவரை தெரியும். எனது வீட்டில் அருகில் தான் இருந்தார்.
நண்பர்களாக ஆரம்பித்து காதலாக மாறியது. சினிமா வாய்ப்பு கிடைத்து நடிக்க வந்துவிட்டேன். அவர் படிப்பில் கவனம் செலுத்தி படுத்து கொண்டிருந்த பொது போன் இல்லாத காலத்தில் லெட்டர் எழுதி எனக்கு அனுப்பி வைத்தபோது என் அம்மா கையில் மாட்டியதால் காதல் விசயம் தெரிந்தது. வேலை கிடைக்கட்டும் என்று சொல்லி காத்திருந்தார். நானும் அவரும் வேறு மதம்.
சினிமாவில் பிஸியாக இருந்ததால் குடும்பத்தை நடத்தமுடியுமா என்று கேட்டார். வேலை கிடைத்ததும் கையில் காசு இல்லாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
வேறு மதம் என்று தெரிந்தும் எப்படி செட்டாகும் என்று நினைத்தும், அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் எங்கள் காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டி திருமணம் செய்து வைத்ததாக கூறியிருக்கிறார் நடிகை நதியா.