அந்த விசயத்தில் சமந்தாவை மிஞ்சிய மாஜி கணவர் நாக சைதன்யா? போட்டி போட வேற எதுவும் கிடைக்கலையா!!
சினிமாவிற்காக வாழ்க்கையை ஒதுக்கும் நட்சத்திரங்கள் ஒருசிலர் மட்டுமே இருக்கிறார்கள். அப்படி தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இருவரும் ஒன்றாக நடிக்க ஆரம்பித்து பின் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் சமந்தா - நாக சைதன்யா. திருமணத்திற்கு பிறகும் நடிக்க ஆரம்பித்த சமந்தா ஒருசில சர்ச்சை காட்சிகளில் நடித்து கணவரை பகைத்து கொண்டார்.
பின் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் விவ்காரத்து பெற்றனர். படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்து வரும் சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு யசோதா, சகுந்தலம், குஷி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதையடுத்து பாலிவுட்டில் நடிகர் சல்மான் கான் படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. மொத்தம் 10 நடிகைகள் அந்த படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மாஜி மனைவிக்கு முன்பே பாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் நாக சைதன்யா.
லால் சிங் சட்டா என்ற படத்தில் அமீர் கானின் நண்பராக நாக சைதன்யா நடித்திருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 11ல் வெளியாகவுள்ளது. ஆனால் நடிகை சமந்தா ஏற்கனவே பாலிவுட் வெப் சீரிஸ் படமான தி பேமிலி மேன் படத்தில் தொடரில் நடித்து பல விருதுகளை தட்டிச்சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.