முன்னாள் மனைவியை பழிவாங்கும் நாக சைதன்யா? பீஸ்ட் நடிகைக்கு ரூட்டு போட்டுட்டாரே!

samantha poojahegde maanaadu nagachaitanya
By Edward Feb 27, 2022 04:21 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் நடிகை சமந்தா, பூஜா ஹெக்டே. முகமூடி படத்தின் மூலம் சமந்தாவிற்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். அவர் அறிமுகமாகிய அடுத்த நாள் தான் சமந்தா தெலுங்கு சினிமாவில் நாக சைதன்யா படத்தில் அறிமுகமாகினார்.

இதன்பின் இருவரும் முன்னணி நடிகைகளாக இருக்கும் போது சமுகவலைத்தளத்தில் பூஜா ஹெக்டே கணக்கு ஹேக் செய்யப்பட்டதை சமந்தா சக நடிகைகளுடன் சேர்ந்து கிண்டல் செய்தார்.

இதற்கு பூஜா ஹெக்டேவும் சமந்தாவை கிண்டல் செய்ய, படத்தின் காட்சிகள் போஸ்டர்கள் என இருவரும் மாறி மாறி கேலி செய்து சர்ச்சையையும் பகையையும் அதிகரித்துக்கொண்டனர். சினிமா பிரபலங்களுக்கு படங்களில் நடிக்க போட்டி இருந்து ரியல் வாழ்க்கையில் நண்பர்களாக தான் இருப்பார்கள்.

ஆனால் சமந்தா பூஜா ஹெக்டே இன்னும் நேரில் கூட சந்திக்காமல் இருந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட பூஜா ஹெக்டே ஐட்டம் பாடலுக்கு நடனமாடி பிரபலமானதை பார்த்து சமந்தா புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பெரியளவில் பேமஸ் ஆகினார்.

இப்படி இருக்கும் நிலையில் சமந்தா நாக சைதன்யாவை பிரிந்து படங்களில் இருவரும் கவனம் செலுத்து வருகிறார்கள். சமீபத்தில் நாக சைதன்யா சமந்தாவை கடுப்பேற்றும் வண்ணம் நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பதாக கூறி வந்தனர்.

இந்நிலையில் மாநாடு படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யா நடிக்கவிருப்பதாக செய்துகள் பரவியது. தற்போது அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. ஒருவேல பழிவாங்க நாக சைதன்யாவே கேட்டு இருப்பாரோ என்று கிண்டல் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.