சமந்தாவுடன் சேர்கிறாரா முன்னாள் கணவர்!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் நாக சைதன்யா..
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நன்றாக வாழ்ந்து வந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ல் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.
4 வருட திருமண வாழ்க்கையை முறித்து படங்களில் இருவரும் கவனம் செலுத்தி வந்தனர். விவாகரத்து குறித்து சமந்தாவும் நாக சைதன்யாவும் வெளிப்படையாக கருத்துக்களை கூறாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் இணையவுள்ளார்கள் போன்ற வதந்திகள் பரவி வந்தது. வதந்திகளுக்கு எந்த கருத்தையும் கூறாமல் இருவரும் பிஸியாக இருக்கிறார்கள். பட வாழ்க்கையில் பிரபலமாவதை விட தனிப்பட்ட வாழ்க்கையில் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறார்கள்.
அந்தவகையில் தனிப்பட்ட வாழ்க்கையில் மீடியாக்கள் அதிக கவனம் செலுத்துவதாகவும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய உண்மை அவருக்கு நெருக்கமானவர்களுக்கு நன்றாக தெரியும் என்று கூறியிருக்கிறார் நடிகை நாக சைதன்யா.
மேலும் மக்களும் மீடியாக்களும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கவனம் செலுத்தி வருவதை அவர் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் படத்தை பார்த்தும் அவரது வேலையை பார்த்தும் தான் அங்கீகரிக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து யாரும் ஜட்ஜ் செய்ய வேண்டாம் என்றும் கூறியிருக்கிறாராம்.