திருமணத்திற்கு முன் காருக்குள் இளம்பெண்ணுடன் கசமுசா... போலிசில் சிக்கிய நாக சைதன்யா..

Samantha Naga Chaitanya Bollywood
By Edward Aug 14, 2022 09:21 AM GMT
Report

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நாக சைதன்யா. விண்னைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சமந்தாவுடன் ஜோடி போட்டு நடித்து வந்த நாக சைதன்யா, நடிகை சமந்தாவை கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சரியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்துக்கு பின் அமைதியாக இருந்த இருவரும் சமீபகாலமாக விவாகரத்து குறித்து மறைமுகமாக மாறிமாறி சாடி பேசி வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சமந்தாவை புகழ்ந்து தான் நாக சைதன்யா பேசியிருந்தார். இந்நிலையில், நாக சைதன்யா. பாலிவுட்டி அறிமுகமாகி லா சிங் சத்தா படத்தில் ஆமிர் கானுடன் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டிக்கொடுத்து வருகிறார் நாக சைதன்யா. ஒரு பேட்டியில் தொகுப்பாளர், எப்பவாவது போலிசிடம் தப்பு செய்து மாட்டிக்கொண்டீர்களா என்று கேட்டார்.

அதற்கு நாக சைதன்யா, ஒருமுறை காரில் இளம் பெண்ணுடன் இருந்த போது வசமாக சிக்கினேன். ஐதராபாத்தில் அந்த சம்பவம் நடந்தது. சிக்கியயபோது பயமாக இருந்ததா என்ற கேள்விக்கு,

சொல்றதுக்கு ஒரு கதையாவது ஆச்சேனு நினைத்தேன் என்று கூறி அந்த காருக்குள் நான் என்ன செய்தேன் என்று எனக்கு மட்டும் தான் தெரியும் என்று சிரித்தபடி கூறியுள்ளார். திருமணத்திற்கு முன் இப்படியெல்லாம் செய்து மாட்டிட்டீங்களே பாஸ் என்று பலர் கேலி செய்து வருகிறார்கள்.

Gallery