சமந்தா விவாகரத்து செய்தும் கையில் அதை அழிக்கவே இல்லை.. நாக சைதன்யா சொன்ன சீக்ரெட்..
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நாக சைதன்யா. தற்போது பாலிவுட் நடிகர் ஆமிர் கானின் லால் சிங் சத்தா என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் ஆமிர்கானின் ராணுவ நண்பராக நடித்துள்ளார் நாக சைதன்யா.
தமிழ் உட்பட பல மொழியில் உருவாகியுள்ள இப்படத்தினை ரெட் ஜெயண்ட் முவிஸ் வெளியிடுகிறது. இப்படத்தில் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் அவர் கலந்து கொண்ட பாலிவுட் ஊடகத்தின் பேட்டியில் கையில் இருக்கும் டேட்டூவை பற்றிய சீக்ரெட்டை பகிர்ந்துள்ளார்.
கையில் உள்ள டேட்டுவை பற்றிய கேள்விக்கு, அது தனது திருமண தேதியை குறிக்கும் டேட்டூவாக இருக்கிறது. இதனை என்னுடைய ரசிகர்கள் அப்படியே காப்பி அடித்து வருகிறார்கள். அதை தயவு செய்து செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார் நாக சைதன்யா.
மேலும் ஏன் அதை அழிக்கவில்லை என்ற கேள்விக்கு, அந்த டேட்டுவை அழிக்க எண்ணம் எனக்கு இதுவரை வந்தது கிடையாது. எதையும் மாற்றவேண்டாம், அப்படியே இருக்கட்டும் எந்த பிரச்சனையும் இல்லை என்று சாதாரணமாக பதிலளித்தார்.
விவாகரத்துக்காக ஆசைப்பட்டு செய்த ஒன்றினை எப்படி அழிக்க முடியும் என்று நாக சைதன்யா ரசிகர்கள் கருத்தினை பதிவு செய்து வருகிறார்கள்.