இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான சமந்தா, நாக சைதன்யா.. மகனுக்காக நாகர்ஜுனா எடுத்த முடிவு..
தென்னிந்திய நடிகையாக டாப் இடத்தில் இருந்து வரும் நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்தும் படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் விவாகரத்து பெற்ற சில ஆண்டுகளில் சமந்தா வீட்டார் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்ய விரும்பியுள்ளனர்.
அதற்காக மாப்பிள்ளையும் பெற்றோர்கள் பார்த்துள்ளதாகவும் நடிகை சமந்தா வேறொரு வாரிசு நடிகருடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் செய்திகள் கசிந்திருந்தது. ஆனால் சமந்தா தரப்பில் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் நடிகை சமந்தா எப்படி இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் வெளியாகி பரவி வருகிறதோ, அதேபோல் சமந்தாவின் முன்னாள் கணவர் நடிகை நாக சைதன்யாவும் இரண்டாம் திருமணம் செய்யவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
நாக சைதன்யாவின் அப்பா நடிகர் நாகர்ஜுனா, தன் மகனுக்காக இரண்டாம் திருமணம் செய்துவைக்க திட்டம் போட்டுள்ளாராம். தனது சொந்தத்தில் இருக்கும் பெண் ஒருவரை தான் மகனுக்காக பார்த்திருக்கிறாராம்.
விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாகவும் தகவல் டோலிவுட் வட்டாரத்தில் கசிந்துள்ளது. ஆனால் இன்னும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.