என்னை குற்றவாளியை போல் பார்க்கிறீர்கள்.. சமந்தாவுடான விவாகரத்து குறித்து பேசிய நாகசைதன்யா

Samantha Naga Chaitanya
By Kathick Feb 09, 2025 03:30 AM GMT
Report

நடிகை சமந்தா - நடிகர் நாகசைதன்யா இருவரும் காதலித்து 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பின் 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுடைய விவாகரத்து பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

விவாகரத்துக்கு பின் இருவர் குறித்து பல விதமான சர்ச்சைகளும், வதந்திகளும் இணையத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் நாகசைதன்யா, இதுகுறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

என்னை குற்றவாளியை போல் பார்க்கிறீர்கள்.. சமந்தாவுடான விவாகரத்து குறித்து பேசிய நாகசைதன்யா | Naga Chaitanya Talks About Divorce With Samantha

இதில் "நானும் சமந்தாவும் தனிப்பட்ட காரணங்களுக்காக விவாகரத்து செய்யும் முடிவை எடுத்தோம். இருவருமே ஒருவருக்கொருவரை மதிக்கிறோம். ஆனால் ஏன் என்னை குற்றவாளியை போல் பார்க்கிறீர்கள். ஒரு உறவை முறித்துக் கொள்வதற்கு முன் நான் 1000 முறை யோசிப்பேன். ஏனெனில் அதன் பின்விளைவுகளை பற்றி எனக்கு நன்றாக தெரியும். இது இருவரும் இணைந்து எடுத்த பரஸ்பர முடிவு" என அவர் கூறியுள்ளார்.

சமந்தவுடனான விவாகரத்துக்கு பின் நடிகை சோபிதாவை காதலித்து வந்த நாகசைதன்யா கடந்த ஆண்டு அவருடன் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னை குற்றவாளியை போல் பார்க்கிறீர்கள்.. சமந்தாவுடான விவாகரத்து குறித்து பேசிய நாகசைதன்யா | Naga Chaitanya Talks About Divorce With Samantha