சோபிதாவுடன் திருமண வாழ்க்கை இப்படித்தான் இருக்கு!! நாக சைதன்யா கொடுத்த ரியாக்ஷன்..
நாக சைதன்யா
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா, 2017ல் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கடந்த 2021ல் விவாகரத்து செய்து பிரிந்தார்.
அதன்பின் படங்களில் பிசியாக நடித்து வரும் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் ரகசிய காதலில் இருந்து பின் கடந்த வருடம் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்தார். தற்போது தண்டே என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நாக சைதன்யா, படத்தின் நாயகி சாய் பல்லவியுடன் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
திருமண வாழ்க்கை
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சோபிதாவுடன் திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். என்னுடைய திருமண வாழ்க்கை நன்றாக இருக்கிறது.
நான் அதை முழுமையாக அனுபவித்து வருகிறேன் என்றும் திருமணமாகி இரு மாதங்கள் தான் ஆகின்றது, சினிமாவையும் வாழ்க்கையையும் நாங்கள் சமமாக கொண்டு செல்கிறோம்.
நானும் சோபிதாவும் ஒரே சிட்டியை சேர்ந்தவர்கள் இல்லைத்தான், ஆனால் கலாச்சார ரீதியாக நிறைய ஒற்றுமைகள் எங்களுக்குள்ளே இருக்கிறது என்று கூறியிருக்கிறார் நடிகர் நாக சைதன்யா.