பிரபல நடிகர் கைக்காட்டியும் பிரயோஜனம் இல்லையே! நம்பி வந்த இயக்குனரை ஒதுக்கிய சமந்தாவின் மாஜி கணவர்

Samantha Naga Chaitanya
By Edward Jun 02, 2022 12:53 PM GMT
Report

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் வெங்கடேஷ் நடிப்பில் எஃப் 3 படம் தியேட்டரில் வெளியாகி மக்கள் மனதை ஈர்த்து வருகிறது. இப்படத்தினை அடுத்து ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் வெங்கடேஷிடம், இயக்குனர் தருண் பாஸ்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக 2 வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாகியது.

ஆனால் தற்போது கதை பிடிக்கவில்லை என்று கூறி தருண் பாஸ்கரிடம் இருந்து கைநழுவியுள்ளார் வெங்கடேஷ். இந்த கதை பிடிக்காமல் போக நடிகை நாக சைதன்யாவுக்கு செட்டாகும் என்று அவரை பார்த்து கைநீட்டியுள்ளார்.

உடனே தருண் பாஸ்கரும் நாக சைதன்யாவிடம் சென்று பாதி கதையை கூறியிருக்கிறார். இப்படத்தினை சுரேஷ் பாபு தயாரிக்க முன்வந்துள்ள நிலை நாக சைதன்யா நடிப்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாம்.

ஏற்கனவே இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கும் நாக சைதன்யா இன்னும் ஒரு மாதத்தில் ஷூட்டிங்கிற்கு தயாராகிவிடுவாரா. மேலும் தூதா வெப் தொடரில் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் நடிக்கவும் இருக்கிறார். அப்படியிருக்கையில், நாக சைதன்யா தருண் பாஸ்கரை ஒதுக்கி வைத்துவிட்டாராம்.