விவாகரத்துக்கு பின் சமந்தாவின் மாஜி கணவரின் கிரஷ் இந்த நடிகையா!! வாய்க்கொடுத்து மாட்டிய நாக சைதன்யா..

Samantha Naga Chaitanya Sobhita Dhulipala
By Edward Apr 29, 2023 01:15 PM GMT
Report

தெலுங்கு திரையுலகில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடிகை சமந்தாவுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகர் நாக சைதன்யா. இப்படத்தினை தொடர்ந்து சமந்தா பல படங்களில் நாக சைதன்யாவுடன் ஜோடிப்போட்டு நடித்தார்.

அதன்பின் இருவருக்கும் காதலாக மாறி கடந்த 2017ல் நாக சைதன்யா சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நன்றாக வாழ்ந்து வந்த இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் சில படங்களில் சர்ச்சையாக சமந்தா நடித்தது தான் காரணம் என்று கூறப்பட்டது.

இதனால் நாக சைதன்யாவும் சமந்தாவும் 2021ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். சட்டப்பூர்வமாக பிரிந்தப்பின் இருவரும் படங்களில் நடிக்க ஆரம்பித்தனர். சமீபத்தில் நடிகை சோபிதாவுடன் ரகசிய காதலில் இருப்பதாகவும் இருவரும் வெளிநாட்டில் டேட்டிங் சென்று வந்ததாகவும் செய்திகள் பரவியது.

தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஷ்டடி படத்தில் நாக சைதன்யா நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷனுக்காக பிரபல யூடியூபர் சேனலுக்கு பேட்டிக்கொடுத்து பல விசயங்களை பகிர்ந்துள்ளார். அதில் உங்களின் ரகசிய கிரஷ் யார் என்று கூறுங்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், ரகசிய கிரஷ்ல்லாம் இல்லை, கிரஷ்-ன்னா ஓப்பனா சொல்லிடுவோம். கடைசியாக ஒரு ஆங்கில படமான Babylon பார்த்தேன். அப்படத்தில் நடித்த நடிகை மார்கோ ராப்பி தான் என்னுடைய கிரஷ் என்று கூறியிருக்கிறார்.

Gallery