சமந்தாவை வெறுப்பேற்றி வம்புக்கு இழத்த மாஜி கணவர்! இந்த டயலாக் தேவையா நாக சைதன்யா

Samantha Naga Chaitanya
By Edward Jul 13, 2022 02:30 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நாக சைதன்யா. தற்போது தங்க் யூ என்ற படம் உள்பட ஒருசில படங்களில் வெளியாகவுள்ளது. நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

விவாகரத்துக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்தி வரும் நாக சைதன்யா சமீபத்தில் சமந்தாவுடன் வாழ்ந்த போது வளர்ந்த செல்ல பிராணி ஹாஷ்க்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். பிஸ் யூ என்று கூறிய நாக சைதன்யாவின் பதிவு இணையத்தில் வைரலாகியது.

இதற்கு காரணம் தங்க் யூ படத்தில் பிரமோஷனுக்காக அவர் போடப்பட்ட பதிவாக இருந்தது. இந்நிலையில் தங்க் யூ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதில் முன்னாள் மனைவி சமந்தாவை தாக்கும் விதமாக ஒரு வசனம் அமைந்துள்ளது.

அதில் உறவில் இருக்கும் ஒருவரை கட்டுப்படுத்தும் காதலைவிடவும், விட்டுக்கொடுத்து போகும் காதல் சிறப்பானது என்ற வசனம் அமைந்துள்ளது. இதனை சமந்தா ரசிகர்கள் இதை கவனித்தீர்களா சமந்தா என்று கருத்துக்களை கூறியும் இந்த டயலாக் தேவையா நாகா என்ற கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.