முன்னாள் மனைவியிடம் மண்ணை கவ்விய நாகசைதன்யா.. இப்படியொரு மோசமான நிலைமையா

Samantha Naga Chaitanya
By Kathick May 15, 2023 05:56 AM GMT
Report

நாகசைதன்யா - சமந்தா இருவரும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 4 வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும் திடீரென விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். விவாகரத்து பின் இருவரையும் குறித்து பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் வைரலாகி வருகிறது.

நாகசைதன்யா நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கஸ்டடி. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெறவில்லை. சற்று மோசமான விமர்சனத்தை பெற்றதால் வசூலும் குறைந்துவிட்டது.

இந்நிலையில் சமந்தா நடித்து வெளிவந்த யசோதா படத்தின் வசூலை விட நாகசைதன்யாவின் கஸ்டடி படத்தின் வசூல் மிகக்குறைவு என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பகிர்ந்து நாகசைதன்யா ரசிகர்களை சமந்தாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கடுப்பாக்கி வருகிறார்கள்.