மகனுக்கு அதற்கு தைரியம் இல்லை.. நிகழ்ச்சியில் ஓப்பனாக சொன்ன நாகார்ஜூனா!
Naga Chaitanya
Actors
Nagarjuna
By Bhavya
நாகார்ஜுனா
அக்கினேனி நாகேஸ்வர ராவ்வின் மகனான நாகார்ஜுனா தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார். 1986ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த விக்ரம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அன்றில் இருந்து இன்று வரை பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் கூலி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
நாகர்ஜூனா ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடித்த சிவா படம் 35 வருடங்களுக்கு பிறகு தற்போது ரீரிலீஸ் ஆகிறது.
தைரியம் இல்லை!
அதற்கான நிகழ்ச்சியில் பேசிய நாகர்ஜூனாவிடம், அந்த படத்தின் ரீமேக்கில் உங்கள் மகன்கள் நடிப்பார்களா என செய்தியாளர் ஒருவர் கேட்டிருக்கிறார்.
அதற்கு, "என் மகன்களுக்கு இந்த படத்தினை ரீமேக் செய்ய தைரியம் இல்லை" என நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.
