அந்த படம் மட்டுமில்லையாம்!! வெங்கட்பிரபு இந்த படத்தையும் சுட்டுருக்காரு பாருங்க..
இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் விஜய், சினேகா, பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இதற்கு முன் மாநாடு படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி 100 வசூலை அள்ளியதால் விஜய் கோட் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கோட் படத்தின் ஷூட்டிங் முடிந்து மற்ற வேலைகள் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வெங்கட்பிரபுவின் மாநாடு படம் சில ஹாலிவுட் படத்தின் காப்பி தான் என்று கூறப்பட்டது. மாநாடு டீசரை பார்த்த சிலர் டெனட் படத்தை போன்றுள்ளது என்றனர். ஆனால் படம் வெளியாகியப் பின் அதுபோல் இல்லை என்று கூறி படத்தை கொண்டாடினர்.
2020ல் வெளியான டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேன்ஜர்ஸ் படத்தின் எஸ் ஜே சூர்யா - சிம்பு பேசும் காட்சிகள் கூட அட்டர் காப்பியாக இருந்தது அப்படத்தின் ஆரம்பத்தில் விமான நிலைய காட்சியில், ஹீரோ அணிந்த உடையை போல் சிம்புவும் அதேபோல் ஆடையணிந்து நடித்திருப்பார். இப்படத்தினை பார்த்து இன்ஸ்பயர் ஆகி தான் மாநாடு படத்தின் சில காட்சிகளை வெங்கட் பிரபு எடுத்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க நேக்கட் படத்தின் பல காட்சிகள் மாநாடு படத்தில் அப்படியே வைக்கப்பட்டுள்ள விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், நேக்கட்(Naked) டைட்டிலை பார்த்து ஆபாச காட்சிகள் இருக்குமா என்றால் அது தான் இல்லை. ஆரம்பத்தில் பேக் சைடு முழுவதும் நிர்வாணமாக ஹீரோ லிஃப்டில் இருந்து வெளியே வரும் காட்சியை அமைத்துள்ளனர்.
இப்போது எடுத்திருக்கும் கோட் படம் எத்தனை படத்தின் காப்பியாக இருக்குமோ என்று இந்த தகவலை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.