நெப்போலியனின் முதல் மகனுக்கு திருமணம்.. மணப்பெண் யார் தெரியுமா?

Napoleon Actors Tamil Actors
By Dhiviyarajan Jul 03, 2024 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் மற்றும் குணசித்ர ரோலில்களில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் தான் நெப்போலியன்.

இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 1993 -ம் ஆண்டு வெளியான 'கிழக்கு சீமையிலே' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இவர் ஹீரோவாக நடித்ததை விட அதிகமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நடிகர் நெப்போலியன், ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

நெப்போலியனின் முதல் மகனுக்கு திருமணம்.. மணப்பெண் யார் தெரியுமா? | Napoleon Son Getting Married Soon

இந்நிலையில் மூத்த மகன் தனுஷூக்கு அக்ஷயா என்கிற பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. 

அதற்கு நிச்சயதார்த்த பத்திரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நெப்போலியன் வழங்கியுள்ளார். தற்போது நெப்போலியன் அது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதோ பாருங்கள்..