நான் உடை மாற்றுவதை 5 பேரு பார்த்தாங்க!..கசப்பான அனுபவத்தை சொன்ன நக்ஷத்ரா நாகேஷ்
மாடலிங், தொகுப்பாளர், நடிகை எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் நக்ஷத்ரா நாகேஷ், இவர் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான சேட்டை இந்த திரைப்படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவருக்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நக்ஷத்ரா நாகேஷ், ஓரு படத்தில் நடிக்கும் போது உடைமாற்ற கூட இல்லை. என்னை ஒரு வேனில் சென்று உடை மாற்ற சொன்னார்கள். அந்த வேனில் விண்டோவ் எதுவும் இல்லை முன்புற கண்ணாடி மட்டும் இருக்கிறது.
வேனுக்கு வெளியே ஐந்து பேர் சேர் போட்டு அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் உடை மாற்றுவதை தெரிந்தும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பெண் உடை மாற்ற போகிறார் திரும்பி உட்கார வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை என்று நக்ஷத்ரா நாகேஷ் கூறியுள்ளார்.