ஜெயலலிதா சொல்லியும் கேட்காத நளினி, இந்த தைரியம் யாருக்கு வரும்
J Jayalalithaa
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் 80 களில் கொடிகட்டி பறந்த நடிகை நளினி. இவர் பிரபல நடிகர் ராம ராஜனை திருமணம் செய்துக்கொண்டார்.
இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்தது தான், அதை தொடர்ந்து அவர்களுக்கு விவாகரத்து ஆனது வரை இங்கு பலரும் அறிந்ததே.
இந்நிலையில் ராமராஜன் அதிமுக சட்ட மன்ற உறுப்பினாராக இருந்ததால், எப்போதும் ராமராஜன் மீது ஜெயலலிதாவிற்கு ஒரு அன்பு இருந்தது.
அதனாலேயே நளினியை ஜெயலலிதாவிற்கு ரொம்ப புடிக்குமாம், அதே நேரத்தில் இவர்கள் விவாகரத்து அறிந்த பின் நளினி தன் குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்கிறார் என தெரிந்த, ஜெயலலிதா பள்ளி செலவுகளை நான் பார்த்து கொள்கிறேன் என்றாராம்.
ஆனால், நளினி இல்லை அம்மா, அவர்கள் கஷ்டம் தெரிந்து வளர வேண்டும் என்று கூறி அதை மறுத்து தன் சொந்த காலில் முன்னேறியுள்ளார்.