6 வருடமாக மன உளைச்சல்! குடி பழக்கத்தால் தற்கொலை முயற்சி செய்தாரா நடிகை நமீதா?

cinema heroine movie
By Jon Feb 02, 2021 05:42 PM GMT
Report

சினிமாவில் படவாய்ப்பு கிடைக்கவில்லை என்று மன உளைச்சளால் பிரபலங்கள் தற்கொலை செய்து வருவது அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால நமீதா குடிப்பழக்கத்தால் அப்படியாகினார் என்பது அதிகாரபூர்வமில்லை என்று அதை நமீதாவும் அந்த பிம்பத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உடைத்தார். உடல் எடையை கூட்டி சுமார் 95 கிலோ ஏற்றியதால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கஷ்டப்பட்டு பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார்.

சிலர் நான் மதுவுக்கு அடிமையாகி விட்டதாக பேசினர். ஆனால் எனக்கு சினைப்பை, மற்றும் தைராய்டு நோய்கள் இருந்தது எனக்குத்தான் தெரியும். மேலும், தன்னுடைய எடையை குறைக்க முடியாமலும், சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமலும் தடுமாறியதால் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றி சில முயற்சிகளும் எடுத்துள்ளாராம் நமீதா.

கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக தனிமையில் தவித்து வந்துள்ளார் நமீதா. வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நரக வேதனையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு தியானம் ஜோகாவில் ஈடுபட்டாராம்.

அதன் பிறகுதான் மன அமைதி கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் வீரேந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நமக்கான சந்தோஷம் நமக்குள்ளேயே தான் இருக்கிறது என்பதையும் ஞானி போல கூறியுள்ளார் நமீதா.