உயர்ந்த நடிகர் தான் வேண்டும்!! அங்கிள் நடிகர்களால் கேரியரை தொலைத்து காணாமல் போன நடிகை நமீதா..

Namitha Gossip Today
By Edward Apr 05, 2023 11:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை நமீதா. 2004ல் கேப்டன் விஜயகாந்த நடிப்பில் வெளியான எங்கள் அண்ணன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார்.

அப்படத்தினை தொடர்ந்து ஏய் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாகவும், இங்கிலீஷ்காரன் சத்யராஜுக்கு ஜோடியாக நடித்தும் நான் அவன் இல்லை படத்தின் நடிகர் ஜூவனுக்கு ஜோடியாகவும் நடித்து வந்தார்.

ஆரம்பத்திலேயே தற்போது குணச்சித்திர நடிகர்களாக திகழ்ந்து வரும் சத்யராஜ், சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து வந்தார். அதற்கு காரணம், அந்த நடிகர்கள் தனக்கு சமமான உயரத்தில் இருப்பதால் தான் கரெக்டாக இருக்கும் என்று அவர்களுடன் நடிக்க ஆரம்பித்தார்.

இதனால் கதைகளை சரியாக தேர்வு செய்வதில் தவறு செய்தும் இருந்தார். இதன்பின் உடல் எடையை ஏற்றியதால் கவர்ச்சி பக்கமும் சென்றார் நமீதா. அப்படி தான் அஜித்துடன் பில்லா, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படங்களுக்கு பின் எந்த வாய்ப்பை பெறாமல் காணாமல் போனார்.

அதன்பின் பல ஆண்டுகள் கழித்து பிக்பாஸ் மூலம் ரிஎண்ட்ரி கொடுத்து அவருக்கான சரியான வாய்ப்பை பெறாமல் திருமணம் செய்து இரட்டை குழந்தையும் பெற்றுவிட்டார்.

உயரத்தை பொருட்படுத்தாமல் நமீதா சரியான கதையை ஆரம்பத்தில் இருந்து தேர்ந்தெடுத்து இருந்தால் நயன் தாரா அளவிற்கு கொஞ்சமாவது கேரியரை காப்பாற்றிருக்க முடிந்திருக்கும் என்று கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.