ஆணவத்தின் உச்சத்தில் இருந்தேன்!! கொடுமைப்படுத்தி இருக்கிறேன்!! நடிகை நமீதா ஓபன் டாக்...
தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து டாப் நடிகையாக 2000களில் திகழ்ந்து வந்தவர் தான் நடிகை நமீதா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நமீதாவுக்கு திருமணமாகி இரட்டை குழந்தைகள் பிறந்தது.

நமீதா
சமீபத்தில் உடல் எடையை குறைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நமீதா, தனக்கு இருந்த ஆணவம், தான் நடித்திருக்கக்கூடாத படங்கள், காலம் தாழ்வதற்கு முன் தன்னை மாற்றிக்கொள்ள வெண்டும் என்ற அறிவுறுத்திய நண்பர்கள் குறித்து மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
அதில், என்னுடைய ஆரம்பக்காலத்தில் நான் கொஞ்சம் ஆணவமாக இருந்தேன். முதல், இரண்டு ஆண்டுகள் நான் அப்படித்தான் இருந்தபோது, பலரும் என்னிடம், 'இப்படிப்பட்ட மனநிலையுடன் இருந்தால் இந்த சினிமாத்துறையில் நீண்டகாலம் உங்களால் நிலைத்திருக்க முடியாது' என்று கூறினர். அதன்பின் நான் என்னை மாற்றிக்கொண்டேன்.

அக்காலக்கட்டத்தில் தனது நடத்தை படப்பிடிப்பு தளத்தில் இருந்த சக நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள், தன்னுடன் பணியாற்றிய இளம் உதவியாளர்கள் வரை பலருக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று ஒப்புக்கொள்கிறேன்.
என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரை ஒருவரிடம் இருந்து மட்டும் வரவில்லை. தன்னுடைய அணுகுமுறை எந்தத் திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த பல திரையுலக சகாக்கள், அது தன்னுடைய திரையுலக வாழ்க்கையை பாதிப்பதற்கு முன் என்னை எச்சரித்தது என்று தெரிவித்துள்ளார்.