பிதாமகன் சூர்யா மாதிரி யோசிச்சிருக்கான்!! நடிகை நமீதாவை கடத்தி சென்ற ரசிகர்..
தமிழ் சினிமாவில் க்ளாமர் குயினாக திகழ்ந்து வந்தவர் நடிகை நமீதா. எங்கள் அண்ணன் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகி மஹா நட்கர்ன், ஆள், எங்கிலீஷ்காரன் போன்ற படங்களிலும் நடித்தார்.
இதையடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த நமீதா பில்லா, அழகிய தமிழ் மகன், சண்டை, தீ போன்ற படங்களில் க்ளாமரில் பட்டையை கிளப்பி ரசிகர்களை ஈர்த்து வந்தார். போகபோக உடல் எடையை ஏற்றியதால் வாய்ப்பினை இழந்து ஆளே காணாமல் போனார்.
பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரீஎண்ட்ரி கொடுத்தார். மச்சான்ஸ் என்று கூப்பிடும் அழகில் ரசிகர்களை ஈர்த்து வந்தார். பிக்பாஸ் முடிந்த கையோடு வீரேந்திரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் 2010ல் திருச்சியில் நடைப்பெற்ற ஒரு விழாவிற்கு அவரது மேனேஜருடன் விமானத்தில் சென்றார். திருச்சி விமானத்தில் இருந்து கூட்டிச்செல்ல காரினை நிகழ்ச்சி நடத்துபவர்கள் அனுப்பி வைத்தனர். நான் தான் நிகழ்ச்சிக்கு கூட்டிச்செல்லும் டிரைவர் என்று நமீதாவின் ரசிகர் ஒருவர் அவரது காரில் நமீதாவும் அவரது மேனேஜரை அழைத்து கூட்டிச்சென்றார்.
காரினை எடுத்த டிரைவர் வெகுவேகமாக சென்றதால் இதை பார்த்த உண்மையாக அனுப்பி வைக்கப்பட்ட கார் டிரைவர் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு கால் செய்து உசார்படுத்தியுளார். உடனே அந்த காரை பாலோ செய்த பலர் காரை மடக்கி அந்த நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனால் ஷாக்கான நமீதா நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அந்த நபரை விசாரித்ததில் நமீதாவின் தீவிர ரசிகர் என்றும் காரில் கூட்டிச்சென்று சில நேரம் இருக்கலாம் என்ற ஆசையில் இப்படி செய்துள்ளார் என தெரிவித்துள்ளார். இதை நமீதா கூட ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
Fan Tried To Kidnapped #Namitha pic.twitter.com/Glozc5ZbLf
— chettyrajubhai (@chettyrajubhai) June 27, 2022