அந்த இயக்குநருக்கு பிச்சைபோட்ட நயன்தாரா.. பழித்தீர்ப்பதில் பாம்பைவிட மோசம்!! இயக்குநர் கொடுத்த அதிர்ச்சி தகவல்..
நந்தவனம் நந்தகுமார்
தமிழில் வெளியான கெட்டவன் படத்தின் இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நயன் தாரா - சிம்பு விவகாரம் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
அதில், நெல்சன், விக்னேஷ் சிவன் அனைவரும் சிம்புவுடன் பயணித்ததாகவும் அந்நேரத்தில், நயன் தாரா, சிம்புவின் வல்லவன் படத்தில் கமிட்டாகினார். அதன்பின் தான் அந்த படத்தின் லிப்லாக் போஸ்டர் வெளியானது.
நெல்சன் நயன்
அதன்பின் சிம்பு - நயன் பிரிவுக்கு பின் சிம்புவிற்கு யார் யாரெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கெல்லாம் நயன் தாரா வாய்ப்பு கொடுத்து உதவினார். நெல்சன் சிம்புவை வைத்து வேட்டை என்ற படத்தை எடுத்து ட்ராப்பாகியது. இதனல் அவர் அடுத்த படத்திற்கான வாய்ப்பு தேடியபோது சிம்புவை பழித்தீர்க்க வேண்டும் என நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்தார்.
கோலமாவு கோகிலா படத்தை லைகா நிறுவனம் கைவிட நினைத்தபோது நயன் தாரா அதில் தலையிட்டு லைகாவிடம் பேசி படம் வெளிவர காரணமாக இருந்தார்.
நெல்சன் இன்று ரஜினியை வைத்து படம் எடுக்கும் அளவிற்கு பெரிய இடத்தில் வந்திருப்பதற்கு முக்கிய காரணமே நயன் தாரா தான். அவர் மட்டும் அந்நேரத்தில் லைகாவிடம் பேசவில்லை என்றால் கோலமாவு கோகிலா படமே வந்திருக்காது. நயன் தாரா நெல்சனுக்கு போட்டப்பிச்சையால் வளர்ந்துள்ளார்.
விக்னேஷ் சிவனுக்கும்
அதேபோல் விக்னேஷ் சிவனுக்கும் நயன் தாரா வாழ்க்கை பிச்சை போட்டுள்ளார், அதனால் தான் விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு போனார்.
என்னையும் சிம்புவிற்கு பிடிக்காது எனக்கும் நயன் தாரா ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம், ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சிம்புவும் நயன் தாராவும் நெருங்கி பழகிய அனைத்தும் எனக்கு தெரியும் என்பதால் நயன் தாரா என்னை வளர்த்துவிட விரும்பவில்லை.
பாம்பு பழிவாங்குமானு எனக்கு தெரியாது, ஆனால் நயன் தாரா நினைத்தால் பழிவாங்காமல் இருக்கமாட்டார் என்று இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.