Mood-ஆ பாடுங்க, பைட் பண்ணி பாடுங்கன்னு சொன்ன இயக்குநர்!! பிரபல பாடகி சுனிதா காட்டம்..
சுனிதா சாரதி
தமிழில் பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடி பிரபலமானவர் தான் பாடகி சுனிதா சாரதி. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் பெண் பாடகர்கள் சந்திக்கும் சங்கடங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அதில், அதுவொரு மிகவும் செக்ஸியான பாடல், நான் பாட சென்றபோது அந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டும் இருந்தார்கள். ஒரு பெண்கள்கூட இல்லை. அப்போது அப்படத்தின் இயக்குநர் என்னிடம், கொஞ்சம் மூட்-ஆ(MOOD) பாடுங்கன்னு சொன்னார்.
இசையமைப்பாளர் அதை சொல்லவில்லை. இயக்குநர் தான் அப்படி பாடச்சொன்னார். உடனே நான் என் முகத்தை மிகவும் கோபமாக வைத்துக்கொண்டு, அவரது முகத்திற்கு நேராகவே, எனக்கெல்லாம் மூடா பாட வராது என முகத்தில் அடித்தது போல் சொல்லிவிட்டேன்.
உடனே அவர் அதிர்ச்சியாகி, என்ன மேடம் இப்படி சொல்லிட்டீங்க என்று கேட்டார். அப்பாடல் எதுவென்று வெளிப்படையாக சொல்ல விரும்பாத சுனிதா சாரதி, சினிமாத்துறையில் பயன்படுத்தப்படும் சில சொற்கள் அருவருப்பானதாக இருக்கிறது.

ஸ்டூடியோவில் மூடா பாடுங்க, கொஞ்சம் பைட் பண்ணி பாடுங்க என்ற வார்த்தைகளை பயன்படுத்தும்போது, பாடகர்களுக்கு எந்த மூடும் வராது, மாறாக அருவருப்பாகவும், மிகுந்த சங்கடமாகவும் தான் இருக்கும்.
அவர்கள் அப்படி பேசும்போது டென்ஷனாகிவிடும் பாடல் பாடுவதைவிட, எப்போது இந்த இடத்தைவிட்டு வெளியே போவோம் என்ற எண்ணம் தான் வரும். பாடகர்களிடம் இதுபோன்ற மலிவான வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு பதில், Sensuality, Sexuality என்ற வார்த்தைகளை தெளிவாக, மரியாதையாக பயன்படுத்தலாம். மூடா பாடுங்க, என்று சொல்வதெல்லாம் ஒரு பாடலை பாடுவதற்கான சரியான இசை வழிகாட்டலே கிடையாது என்று கூறியிருக்கிறார் சுனிதா சாரதி.