3 வருட நரக வேதனை.. நடிகை சமந்தாவை போல் விசித்திர நோயால் அவதியுறும் விஜய் பட நடிகை!
Vijay
Nandita Swetha
Samantha
Tamil Actors
By Dhiviyarajan
பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா.
இதனையடுத்து இவர் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி எனப் பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான புலி படத்திலும் நடித்திருப்பார்.
சமீபத்தில் கலந்துகொண்டு பேசிய நந்திதா ஸ்வேதா, "நான் ஃபைப்ரோமியால்ஜியா எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். உடல்சோர்வு, வலி, தசைக்கூட்டு வலி, உணர்ச்சிகள் சமநிலையின்மை போன்றவற்றை இந்த நோயின் அறிகுறிகள்."
"மூன்று ஆண்டுகளாக இந்த பிரச்சனையால் போராடி வருகிறேன். என்னால் அதிகம் நேரம் எந்த வேலையும் செய்ய முடியாது" என்று நந்திதா ஸ்வேதா கூறியுள்ளார்.